ட்ரில்லியன்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் உற்பத்தி ஆலை

54பார்த்தது
தமிழகத்தில் ரூ. 2, 000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது, தமிழகத்தில் ரூ. 2, 000 கோடி முதலீட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் (Development and Global Support Centre) மற்றும் உற்பத்தி மையம் அமைக்க ட்ரில்லியன்ட் (Trilliant) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ட்ரில்லியன்ட் நிறுவனம் தமிழகத்தில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய மையத்தை அமைக்க ரூ. 2, 000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன். ‘நைக்கி’ நிறுவனத்துடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது, சென்னையில் தயாரிப்பு, உருவாக்கம், வடிவமைப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். திருச்சி, மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி