சென்னை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்

66பார்த்தது
சென்னை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், சென்னை மக்களை கவரும் வகையிலான சில அறிவிப்புகளும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நாளை (பிப். 22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வரவு செலவு திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி