சென்னை: மத்திய அரசு நிதியை விடுவிக்க வலியுறுத்தப்படும் - முதல்வர்

55பார்த்தது
மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க வலியுறுத்தப்படும் என்று மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (திஷா - DISHA) பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு. க.மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப். 15)(பிப்.15) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ.கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக்கொண்டதின்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் PMAYG திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி