கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில், 70 வயது மூதாட்டியிடம் சாப்பாடு வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்ற பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, ஆனந்த் என்பவரிடம் மூதாட்டி ஒருவர் சாப்பாடு வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனடியாக ஆனந்த்தும் வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மூதாட்டி, கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து மூதாட்டியை மீட்டனர்.