எழும்பூர் - Egmore

சென்னை: துரை வைகோ விலகல் - மதிமுகவினர் கருத்து

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி அழைப்பு
Apr 20, 2025, 03:04 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

சென்னை: கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி அழைப்பு

Apr 20, 2025, 03:04 IST
சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் இன்று உருவெடுத்துள்ளன. அதற்கேற்றாற்போல், இளைஞர் அணியினரும் சமூக வலைதளங்களில் களமாடும் வகையில், நம் நிர்வாகிகளுக்கு சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும், சமூக வலைதளம் சார்ந்த அவர்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி தலைமை ஒப்புதலுடன் மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அல்லது 'http://bit.ly/DMKYW_SM' என்ற இணைப்பில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.