சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பின்னி மில் பார்க்கிங் வளாகத்தில் திமுக இளைஞரணி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் அறுசுவை உணவு விருந்தளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் கே என் நேரு கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை தையல் தொகையுடன் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.