பி. சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர்விருது: முதல்வர் வழங்கினார்

84பார்த்தது
கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு. மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திரையுலகில் 20, 000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி. சுசிலா-வுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு. மேத்தா-வுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் 24. 9. 2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, தமிழக முதல்வர் இன்றைய தினம், கருணாநிதி நூற்றாண்டு நினைவாக கவிஞர் திரு. மு. மேத்தா-வுக்கும், பின்னணி பாடகி பி. சுசிலா-வுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி