110 கி. மீ. வேகம்: வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

57பார்த்தது
சென்னை - ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே முதல் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மணிக்கு 110 கி. மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூர் ஐ. சி. எஃப் ஆலையில் முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. 150 கி. மீ. முதல் 200 கி. மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகளை கொண்ட இந்தரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில், உள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, ஐ. சி. எஃப் ஆலையில் இந்த ரயிலில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை - காட்பாடி இடையே இந்த ரயிலை இயக்கி சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே நேற்று காலை தொடங்கியது. இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து நேற்று காலை 8. 15 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது.

தொடர்புடைய செய்தி