பேராசிரியர்களின் போலி நியமன முறைகேட்டில் பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜுக்கு ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளார். 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.