6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்: இந்து முன்னணி கண்டனம்

50பார்த்தது
6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்: இந்து முன்னணி கண்டனம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி நாளன்று நடத்த இருக்கின்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையில் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 7-ம் தேதி, 6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளன. இத்தகைய நாளில் ஆறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நயவஞ்சகமாக பறிக்கும் செயல் என இந்து முன்னணி கண்டிக்கிறது.

எனவே தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடத்த இருக்கின்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி