தமிழ்நாட்டில் 1. 70 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

66பார்த்தது
தமிழ்நாட்டில் 1. 70 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தேர்தலில் 1. 7 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடங்களில் போலீசார் விரைந்து செல்ல முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வருகிற 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சட்டீஸ்கர் 1, மத்தியபிரதேசம் 6, மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம், நாகாலாந்து தலா ஒரு தொகுதி, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 3, அந்தமான் நிக்கோபர், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி