ஆவடி: அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றிய அதிமுக கழக செயல் வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் சிறுவனூர் கண்டிகையில் உள்ள மஹாலில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பி.வி. ரமணா மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.கே. இன்பராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பூண்டி ஒன்றியத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா ஆலோசனைகளை வழங்கினார். கட்சியினரிடம் பேசுகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியில் அமர்த்த ஒன்றிணைந்து பாடுபட்டு உழைக்க வேண்டும் என அமைச்சர் பி.வி. ரமணா கேட்டுக்கொண்டார்.