தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா இன்று (நவ. 18) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளமாக வாங்கும் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 கோடி என்று கூறப்படுகிறது. சொகுசு கார்களை வைத்துள்ள நயன்தாரா மும்பையில் ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.