காரைக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த ஆறு ஆண்டுகளாக தைவான் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அந்நாட்டை சேர்ந்த ஹோ ஹசின் என்ற பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று (நவ. 17) சதீஷ்குமார் - ஹசினுக்கு காரைக்குடியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.