கடலூரை சேர்ந்த செங்குட்டுவன் (65) - பானுமதி (60) தம்பதியின் மகன் கயல்வேந்தன் (35) அந்தமானில் பணியாற்றுகிறார். இவருக்கும் கயல்விழி (29) என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கயல்விழியிடம் அவரின் மாமனார், மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த அவர் நேற்று (நவ. 17) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் செங்குட்டுவன், பானுமதியை போலீசார் கைது செய்தனர்.