பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த சனிக்கிழமை (நவ. 17) சென்னையில் ஊர்வலம் நடத்த முயன்றனர். இதில் தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ரோகிணி உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.