ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ஆராய்ச்சி மாணவர் ஒருவர், தன்னை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, “கல்வி சார்ந்த பணிகளை தவிர வேறு வகைகளில் மாணவர்களை பயன்படுத்தினாலோ, அலைக்கழித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.