சென்னை அணி அபார வெற்றி

564பார்த்தது
சென்னை அணி அபார வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிதானமாகவும், மிரட்டலாகவும் விளையாடியது. கேப்டன் ருத்ராஜ் (69), துபே (66) எடுக்க, கடைசியாக களமிறங்கிய தோனி கடைசி 4 பந்தில் 3 சிக்சர் பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டியதால் 206 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பையில் ரோஹித் ஷர்மா 105 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்ப அந்த அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி