கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் பலி

62பார்த்தது
கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கஸ்னி மாகாணத்தில், ஜெரோ மாவட்டத்தில் குழந்தைகள் கீழே கிடந்த பழைய கண்ணிவெடியை எடுத்து அதுகுறித்து அறியாமல், விளையாடிக் கொண்டிருந்தனர். எதிர்பாராமல் அந்த வெடி வெடித்து சிதறியதில் 4 சிறுமிகள் உட்பட 5 முதல் 10 வயது உடைய 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பேசிய தாலிபான் செய்தி தொடர்பாளர், “இந்த கண்ணிவெடிகள் ரஷ்ய படையெடுப்பின் போது புதைக்கப்பட்டிருக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி