டிக்கெட் பரிசோதகர் கையை கடித்த பெண்

75பார்த்தது
டிக்கெட் பரிசோதகர் கையை கடித்த பெண்
மும்பையில் இருந்து விரார் நோக்கி ஏ.சி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டு சென்றது. தகிசர் - மிராரோடு இடையே ரெயில் சென்றபோது அதிரா சுரேந்திரநாத் (வயது26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர், நைகாவை சேர்ந்த சிங் என்ற பெண் பயணியிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் தனது கணவர் வாட்ஸப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். இது செல்லாது என டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார். இதனால் நடந்த வாக்குவாதத்தில் அதிரா சுரேந்திரநாத் கையை பிடித்து கடித்துவிட்டு தப்பிக்க முயன்றார். இதனை பார்த்த சக பயணிகள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி