தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

20495பார்த்தது
தமிழகத்தில் இன்று மழை பெய்யும்
தமிழகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 15) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதைத்தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி