திணறும் சி.எஸ்.கே! பிளே ஆப் வாய்ப்பில் பின்னடைவு
ஐபிஎல் 2024 சீசனில் கட்டாயம் வெல்ல வேண்டிய ஒரு போட்டியில் குஜராத் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே எதிர்த்து விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்படியும் ஜெயித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக களத்திற்கு வந்த எம்எஸ் தோனி 3 சிக்சர்கள் அடித்தது ஆறுதலை மட்டுமே கொடுத்தது. இந்த தோல்வியின் மூலம் மீதமிருக்கும் 2 போட்டிகளையும் வென்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைமைக்கு சென்றுள்ளது சென்னை அணி.