7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

83பார்த்தது
7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இன்று ஜூன் 30 நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி