வெயிலில் சென்று வந்து ஐஸ் வாட்டர் குடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுமா?

68பார்த்தது
வெயிலில் சென்று வந்து ஐஸ் வாட்டர் குடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுமா?
ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக வெயிலில் சென்று வீட்டிற்கு வந்து குளிர்ந்த நீரை குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படும் என சில பதிவுகள் பரவத் தொடங்கின. ஆனால் இதில் உண்மை இல்லை என்று தான் கூற வேண்டும். வெயிலில் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்த உடனேயே மிக குளிர்ந்த நீரை குடிப்பதால் மாரடைப்பு அல்லது ஹீட் ஸ்டரோக் ஏற்படாது. ஆனால் அதிக குளிர்ந்த நீர் உள்ளே செல்லும் பொழுது வயிற்றில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி வயிற்று வலி அல்லது தலைவலி ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி