+2 தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை!

45107பார்த்தது
+2 தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா, கணக்குப் பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி