புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்ஷே காரை மதுபோதையில் இயக்கி வந்த புனே தொழிலதிபரின் மகன் சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக மோதினான். இதில் பைக்கில் பயணித்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கு நடந்து வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைப்பதற்கான உத்தரவை ரத்து செய்து சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்து முதலில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அது சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.