ரூ.18,178 கோடி கடனில் தமிழக போக்குவரத்துத்துறை

52பார்த்தது
ரூ.18,178 கோடி கடனில் தமிழக போக்குவரத்துத்துறை
தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2018ல் கடைசியாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. கர்நாடகாவில் 2020ம் ஆண்டிலும், ஆந்திராவில் 2022ம் ஆண்டிலும் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. கடும் நிதி நெருக்கடியிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி