ஹீட் ஸ்ட்ரோக் - கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

20474பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக் - கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுமான வேலை செய்துவந்தவர் வடமாநில தொழிலாளி சச்சின் (25). இந்த இளைஞருக்கு வெயிலின் தாக்கம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி சச்சின் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி