நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்த நிலையில், இது குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடல் அதிக வெப்பமடைவதை குறிக்கிறது. வெயிலில் நீண்ட நேரம் இருப்பது அல்லது கடுமையான வெயிலில் உழைப்பதன் விளை
வாக இது ஏற்படலாம். பொதுவாக உடல் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும். இது 104 டிகிரி பாரன்ஹீட் (40 டிகிரி செல்சியஸ்) அளவிற்கு உயர்ந்தால் வெப்ப பக்கவாதம் என்கிற ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதனால் தீவிர பாதிப்பும், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.