உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி

83பார்த்தது
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆதிகேசவலு நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வழக்கு விசாரணைக்கிடையே தலை வலிப்பதாக கூறிய நீதிபதி திடீரென மயங்கினார். உடனடியாக அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆம்புலன்சை வரவழைத்தனர். முதலுதவி சிகிச்சை அளித்தவாறு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி