பறவைக்காய்ச்சல்: 60 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு

68பார்த்தது
பறவைக்காய்ச்சல்: 60 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள செங்கணூர், சேர்த்தலா, தண்ணீர்முக்கம், தைக்காட்டுசேரி, சேன்னம்பள்ளிப்புரம், வயலார், மாராரிக்குளம் புலியூர் உள்பட பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள், கோழிகள் உள்பட பறவைகள் திடீர் திடீரென செத்து விழுந்ததையடுத்து அவற்றின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 60 ஆயிரம் பறவைகளை இன்று முதல் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி