ஹீட் ஸ்ட்ரோக்கால் இளைஞர் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

1058பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக்கால் இளைஞர் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் காமேஷ்(23). மரைன் இன்ஜினியரிங் படித்திருக்கும் இவர், வேலை தேடி கடந்த மாதம் மும்பை சென்றுள்ளார். அங்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. கடும் வெயில் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, மும்பையில் ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி