பட்டியலின இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

78பார்த்தது
பட்டியலின இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய வழக்கில், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஸ் குமார் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சதீஸ் குமார், வாகனத்திற்கான தவணைத் தொகை செலுத்தாத விவகாரத்தில் சங்கர் என்ற இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சதீஸ் குமாரை இன்று கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி