ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கொடிகள் தவிர்ப்பு

53பார்த்தது
ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கொடிகள் தவிர்ப்பு
கேரள வயநாட்டில் ராகுல்காந்தி தலைமையில் நாளை (ஏப்ரல் 15) மற்றும் ஏப்ரல் 16ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளைக் காட்டுவதை தவிர்க்க முடிவு செய்திருப்பதாக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், “கட்சியின் முடிவுக்கான காரணங்களை வெளியிட அவசியமில்லை. மற்ற தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் விரும்பினால் கொடிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி