சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

83பார்த்தது
சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கு மேல் 15 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை பணிகள் முடிந்து வரும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், இன்றும் (மே 18) நாளையும் (மே 19) கடற்கரை - தாம்பரம் இடையே செல்லும் 15 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி