ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

58பார்த்தது
ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆகாயகங்கை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆகாயகங்கை அருவி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று பழைய குற்றாலம் அருவியில் குளித்த போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி