க்ரீம் பிஸ்கட்டில் கஞ்சா- புழல் சிறையில் பெண் சிக்கினார்

21278பார்த்தது
க்ரீம் பிஸ்கட்டில் கஞ்சா- புழல் சிறையில் பெண் சிக்கினார்
கஞ்சா வழக்கில் சிக்கிய கொடுங்கையூரைச் சேர்ந்த மனோஜ்குமார், (35), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ், (23) ஆகியோர் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை அவர்களை சந்திக்க, கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ் (26), பாக்கியலட்சுமி (30) மற்றும் சதீஷ்குமார் (32) ஆகியோர், புழல் சிறைக்கு சென்றனர். அவர்கள், கைதிகளுக்கு கொடுத்த பழம், பிஸ்கட் பாக்கெட்டுகளை சிறை போலீசார் சோதனையிட்டனர். அதில், பிஸ்கட்டில் இருந்த கிரீம் கலவைக்குள், போதைக்காக பயன்படுத்தப்படும் 15 'நைட்ரோவிட்' மாத்திரைகள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவை, நுாதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த சிறை போலீசார், மூவர் மற்றும் கைதிகள் மனோஜ்குமார், அப்பாஸ், பிரதீப்ராஜ் உள்ளிட்ட ஐந்து கைதிகள் மீதும், புழல் போலீசில் புகார் செய்தனர். கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் கொடுத்த மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி