அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

82பார்த்தது
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி