மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி, நேற்று (ஏப்ரல் 13) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாஜக ஆட்சியை அகற்றி, ஜனநாயக மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்தது ஆகும். எனவே அதற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.