கல்வராயன் மலையில் ஏடிஜிபி அதிரடி ஆய்வு

73பார்த்தது
கல்வராயன் மலையில் ஏடிஜிபி அதிரடி ஆய்வு
கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படையினரின் ஆய்வு நீடிக்கும் நிலையில், கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். கடலூரில் நேற்று (ஜூலை 20) புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஏடிஜிபி ஆய்வு நடத்திய நிலையில், இன்று (ஜூலை 21) கல்வராயன் மலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி