பெரம்பலூர்: அடிதடி வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு சிறை தண்டனை
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் சண்முகம் என்பவர் தன்னை அதே கிராமத்தைச் சேர்ந்த 1. ஆறுமுகம் (62) 2. ராஜேஷ் (32) 3. குமார் (47) 4. கோவிந்தராஜ் (52) 5. நாட்டார் @ ராஜீ (55) 6. ஆதிமூலம் (32) ஆகியோர்கள் தாக்கியதாக அரும்பாவூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் 06.12.2024-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகளான 1. ஆறுமுகம் (62) 2. ராஜேஷ் (32) 3. குமார் (47) 4. கோவிந்தராஜ் (52) 5. நாட்டார் @ ராஜீ (55) 6. ஆதிமூலம் (32) ஆகியோர்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக 294(b) IPC –ன் கீழ் 3 மாதம் சிறை ரூ. 500 அபராதம், 341 IPC –ன் கீழ் 1 மாதம் ரூ. 500, 323 IPC - 1 வருடம் ரூ. 1000 அபராதம் என ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா 14 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 2000 அபராதம் விதித்தும் 147, 323 IPC & 3(1)(r) SC/ST Act ஆகிய பிரிவுகளுக்கு Cr. PC 235(1) படி விடுதலை செய்தும் சிறப்பு SC/ST மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.