காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவில் பொறுப்பில் இருக்கிறேன் என சொல்லுவதை விட திமுகவின் உடன் பிறப்பு என சொல்லுவதே பொருமை தான். அதனால், தான் புதுசா புதுசாக வருபவர்கள் எல்லாம் நம்மை அழிப்பேன், ஒழிப்பேன் என சொல்லி வருகிறார்கள். அதனைப் பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை” என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.