பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில்
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அலுவலர்களை உடனுக்குடன் விளக்கமளிக்க செய்து, கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். விவசாயிகள் கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கரும்புக்கான நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு கிடைத்திடவும், வெங்காயத்தில் ஏற்படும் திருகல் நோய் பாதிப்பை தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். கரும்புக்கான நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
வேளாண்மைத்துறை மூலம் 04 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மின்கலதெளிப்பான்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 02 விவசாயிகளுக்கு மாடித்தோட்ட தொகுப்பு மற்றும் ஊட்டச்சத்து பயிர்ச்செடி தொகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.