மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடி, பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சொத்துகளை தற்போது வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஜக கூட்டணி ஆட்சியில் இணைந்த பிறகு அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சொத்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.