சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.