பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

70பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய அளவிலான குழந்தைகள் தின விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி  குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று  நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சா வ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் இலவச குழந்தைகள் உதவி மையத்தின் எண் 1098, குழந்தைகளின் வருமானம் சமுதாயத்தின் அவமானம், குழந்தைகளிடம் பாலின வன்முறை தண்டனைக்குரிய குற்றம், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்காதே, குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து முழக்கமிட்டபடி சென்றனர்.

பாலக்கரையில் தொடங்கிய இப் பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்கு, வழியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவு பெற்றது. பேரணியில் 250 -க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகள் இல்ல பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி