பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க வருகை புரிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.