முசிறியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 28ஆம் தேதி வரை கெடு
முசிறி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிக்கொள்ள நவம்பர் 28ஆம் தேதி வரை நெடுஞ்சாலைத்துறை கால அவகாசம் விதித்துள்ளது. முசிறி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது முசிறி உட்கோட்டம் முசிறி துறையூர் ஆத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்குச் சென்று வருவதற்கு இடைஞ்சலாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன என புகார்கள் வந்துள்ளன. எனவே தற்காலிக ஆக்கிரமிப்புகளை 28.11.2024 அன்று காலை 9 மணிக்கு முன் அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறினால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்படும் என்பதுடன், அதற்கான செலவினத் தொகை அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறார்.