சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெரும் நபர்களுக்கு 5 லட்சம் தொகையும் ஒரு சவரன் தங்கமும் வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பிக்க விரும்புவோர் சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்கள் தரத்தை மேம்படுத்த ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகளை குறித்த தகவல்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.