உத்தரப் பிரதேசத்தின் ஜலாலாபாத்தில் நேற்று (நவ. 25) காளை மாடு ஒன்று திடீரென்று ஆவேசமாக ஓடியது. சாலையில் சென்றவர்களை விரட்டிச் சென்று முட்டியதால் மக்கள் அலறினார்கள். ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டித் தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் மாடு முட்டிய இச்சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டைப் பிடித்தனர்.